போல்ட் என்னை நன்கு புரிந்து வைத்துள்ளார் அவரின் வலிமையை நான் அறிவேன் – கேப்டன் ரோஹித் சர்மா காரசார பேட்டி.

இந்திய அணி நியூசிலாந்து உடன் நேற்று முதல் 20 ஓவர் போட்டி பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து  நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் போகப்போக விக்கெட்டை விடாமல் அதிரடியை காட்டியதால் நியூசிலாந்து.

அணி ஒரு கட்டத்தில் 180க்கு மேல் ரன்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடைசி 4 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது இதனால் நியூசிலாந்து அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்தது அதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இரண்டு ஓவர்களில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அதன்பின் ரோஹித் ஷர்மா தனது அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவர் பிளே முடிந்தவுடன் விக்கெட்டை கொடுக்கக் கூடாது என்பதற்காக ரோகித்சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த சூரியகுமார் ஒருபக்கம் அதிரடியை காட்டினார் இதனால் இந்திய அணி ஸ்கோரை நோக்கி வேகமாக ஓடியது ரோகித் சர்மா 48 ரன்களில் அவுட் ஆனார்.

சூரியகுமாரி அதை 50 ரன்களுக்கு மேல் எடுத்து அசத்தினார் மற்ற வீரர்கள் பெருமளவு ரன்களை எடுக்க வில்லை என்றாலும் இந்திய அணி 19 ஓவரில் வெற்றியை ருசித்தது. போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் ஷர்மா நிச்சயமாக நாங்கள் எதிர்பார்த்த வெற்றி எங்களுக்கு கிடைக்கவில்லை இருப்பினும் இளம் வீரர்கள் என்பதால் அந்த அனுபவத்தை வெகு விரைவிலேயே அவர்கள் கற்றுக்கொள்வார்கள் பவர் ஹிட்டிங் எல்லா நேரத்திலும் அடிக்க முடியாது.

என்பதை புரிந்துகொள்ள இயலும் கேப்டனாக அணியாக வீரர்கள் அணியை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி எங்களுக்கு சிறந்த போட்டியாக இது இருந்தது. சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடினார். போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது என்னுடைய பலவீனத்தை போல்ட் நன்கு புரிந்து உள்ளார் அவரின் வலிமையை நான் அறிவேன் என கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment