விஜயை அலறவிட வரும் பாலிவுட் வில்லன்.! தளபதி 66 படத்திலிருந்து வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்.

தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் இவர் நடிப்பில் வெளிவந்த தெறி, பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் நல்ல ஹிட்டானதை தொடர்ந்து கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் படம்.

மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றனர். இருந்தாலும் வசூல் வேட்டை சிறப்பாக நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் படத்தின் விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்தாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அப்படி விஜயின் பெயர் வைக்கப்படாத அடுத்த படமான தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் மேலும் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சிறப்பாக முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகின்றன.

படத்தில் விஜயுடன் இணைந்து பிரபல நடிகர் சரத்குமார் நடிப்பது ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும் இதில் விஜய்க்கு இரண்டு அண்ணன்களாம் அதில் ஒரு அண்ணனாக ஷ்யாம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்ட இருக்கும் பிரபலம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான கே ஜி எஃப் 2 படத்தில் ராக்கி பாய்க்கு வில்லனாக ஆதிரா கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சய் தத் ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து மக்களின் அதிக பாராட்டுகளைப் பெற்றார். இவர் தற்போது தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment