ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றிய திரைப்படம் ஆனால் வசூல் மட்டும் இத்தனை கோடியா கேட்டால் ஷாக் அடைவீர்கள்.!

சமீபகாலமாக சினிமாவில் இந்தப் படம் தான் ஓடும் என்று கணித்துக் கூற முடியாத அளவிற்கு செல்கின்றன. அதேபோல் இந்த திரைப்படம் ஓடாது என நினைப்பார்கள் அந்த திரைப்படம் தான் திரையரங்கில் பட்டையை கிளப்பும். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் இப்படிதான்.

அந்த வகையில் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் வசூலில் களைகட்டி வருகிறது, டைகர் ஷரப் நடிப்பில் கடந்தவாரம் வெளியாகிய திரைப்படம் பாஹி 3. இந்த திரைப்படம் இப்பொழுது வெளியாகியுள்ளதால் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் யாரும் வர மாட்டார்கள் அதனால் பெரும் நஷ்டம் அடையும் என விமர்சனம் கூறினார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது, இதையெல்லாம் தாண்டி விமர்சகர்கள் படம் தோல்வி என கூறி வந்தார்கள், இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாஹி 3 வெளியாகிய 5 நாட்களில் சுமார் 85 கோடி வரை இந்தியாவில் வசூல் செய்துள்ளது.

அதேபோல் வெளிநாடுகளிலும் மொத்த வசூலை சேர்த்தால் 105 கோடி முதல் 5 நாட்கள் வசூல் செய்துள்ளது, படம் ஓடாது தோல்வி என விமர்சனம் செய்த பலருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது இந்த திரைப்படம், இந்த திரைப்படத்தின் மூலம் டைஜர் ஷரப் அசுரத்தனமான வளர்ச்சி அடைந்துள்ளார் என்பது தெரிகிறது.

Leave a Comment