பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என எதுவாக இருந்தாலும் சரி எனக்கு தல அஜித் தான்.! என கொண்டாடும் இளம் நடிகை!!

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். தல அஜித் அவர்கள் சமீபகாலமாக மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் அதிலும் குறிப்பாக விசுவாசம் ,நேர்கொண்டபார்வை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார் நடிகர் அஜித்.

இவர் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை ஹச். வினோத் அவர்கள் இயக்குகிறார். நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் அவர்கள் இப்படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில்கட்சிலகால எடுக்கப்பட்டு வருகின்றன இதனைத்தொடர்ந்து இப்படக்குழுவினர்  அடுத்த கட்ட படப்பிடிப்புகாக  சென்னை வர உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிகை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது மறைமுகமாகவே வைத்துள்ளது படக்குழு. படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.தல ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த தீபாவளி தல தீபாவளியாக இருக்குமெனவும் அதனை இப்பொழுதே கொண்டாடி வருகின்றனர்.

ajith and meenachi
ajith and meenachi

இந்த நிலையில் சசிகுமார் நடித்து வெளிவந்த கென்னடி கிளப் படத்தில் நடித்த இளம் நடிகையான மீனாட்சி அவர்களுக்கு பிடித்த நடிகரை பற்றி ஊடகங்கள் முன்பு கூறி உள்ளார். அவர் கூறியது பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என எதுவாக இருந்தாலும் சரி எனக்கு தல அஜித் அவர்களை பிடிக்கும் எனவும், அஜித்தை அவர்களை மட்டும் தான் எனக்கு பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.இவரை போல  திரை உலக பிரபலங்கள் பலர் இவருக்கு ரசிகராக  இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment