பாலிவுட் சினிமா எனக்கு சம்பளம் தர அளவுக்கு வொர்த் இல்லை – மகேஷ் பாபு விலசல்.! தயாரிப்பாளர் போனி கபூர் ரியாக்சன் என்ன தெரியுமா.?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அசால்டாக 100 கோடி வசூலை அள்ளும் அதேசமயம் இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்து உள்ளதால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்கமுடியாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது டோலிவுட்டை ஆட்சி செய்யும் மகேஷ்பாபு சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் பாலிவுட் பக்கம் நடிக்க மாட்டேன் எனக்கு சம்பளம் தரவும் அளவிற்கு அவர்கள் இல்லை என கூறி உள்ளார்.

இந்த செய்தியை அறிந்த  பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மகேஷ் பாபுக்கு டோலிவுட் சினிமா ரொம்ப பிடித்துப் போயிருக்கிறது இங்கேயே நான் நடிப்பேன் என கூறினார் மகேஷ் பாபு இப்போது ஒரு படத்திற்கு 80 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலிவுட்டில் தயாரிப்பாளராக இருந்து தற்போது தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு படங்களை தயாரிப்பு வெற்றி கொண்டு வரும் போனிகபூர். அண்மையில் இது பற்றி கேட்கப்பட்டது அதற்கு  அவர் சில காரணங்களைக் கூறி சொல்லி நழுவி நாளும் தொடர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது இதற்கு பதிலளித்த போனிகபூர்.

நடிகர் மகேஷ்பாபுவுக்கு பாலிவுட் செல்ல விருப்பம் இல்லை. அவருக்கு டோலிவுட் ரொம்பப் பிடித்துப் போயிருக்கிறது அதனால் கூட அப்படி சொல்லி இருக்கலாம் குறிப்பாக ஒரு நடிகர் தனது சொந்த மொழியை தான் பெரிதும் விரும்புவார் அதன் பிறகுதான் மற்ற மொழிகளுக்கு செல்வது வழக்கம் அந்த வகையில் மகேஷ்பாபு அப்படி சொல்லியிருக்கலாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறி உள்ளார்.

Leave a Comment