படிப்படியாக அழிந்து வரும் பாலிவுட் சினிமா..! இதற்கெல்லாம் கே ஜி எஃப், புஷ்பா போன்ற திரைப்படங்கள்தான் காரணம்..!

சில தினங்களுக்கு முன்பாக தனியார் youtube சேனல் ஒன்று ரவுண்ட் டேபிள் என்கின்டிற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வந்தது இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளை சேர்ந்த திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சிகள் இந்தி திரை உலகில் இருந்து கரண் ஜோகர் என்பவர் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் வருண் தவான் மற்றும் இயக்குனர் அனுராக் கஷ்யப்  போன்றவர்கள் கலந்து கொண்டது பெருமைக்குரிய விஷயமாக அமைந்தது.

அப்பொழுது அதில் பேசிய அனுராக் கஷ்யாப் காந்தாரா மற்றும் கேஜிஎப், புஷ்பா போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை பார்த்து அதேபோன்று மிகவும் பெரிய பொருட்ச அளவில் பிரமாண்டமான திரைப்படங்களை எடுக்க வேண்டும் என பாலிவுட்டில் இருப்பவர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு செய்வது அழிவை நோக்கி செல்வது போல் இருக்கிறது என அவர் குறிப்பிட்டு இருந்த நிலையில் அவரின் இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இவ்வாறு அவர் பேசிய பதிவுக்கு பிரபல இயக்குனர் ஒருவர் அதற்கு தகுந்த பதில் அடி கொடுத்துள்ளார்.

மேலும் அவர் பேசிய அந்த பதிவினை தன்னுடைய டுவிட்டார் பக்கத்தில் வெளியிட்டது மட்டுமில்லாமல் இந்த இயக்குனர் இப்படி பேசி இருப்பதற்கு நான் என்ன செய்வது என்று உங்களுடைய கருத்தை கூறுங்கள் என ரசிகர்களிடம் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து விட்டார்.

இயக்குனர் விவேக் அக்னி கோத்ரி இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகிய மாபெரும் வெற்றி கண்ட தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியவர் அதேபோல பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அனுராக் தமிழ் சினிமாவில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

Leave a Comment