தெலுங்கு சினிமாவில் சமீப காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் சிறப்பான கதைகள் எடுக்கப்பட்டு வெளியாகின்றன அப்படி பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட்டில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன அதில் ஒன்று அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியானது புஷ்பா திரைப்படம். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளியானது.
இந்த திரைப்படம் தெலுங்கையும் தாண்டி ஹிந்தி தமிழ் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது தமிழில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்திய நிலையில் இந்தியிலும் புஷ்பா திரைப்படம் வெளியிடப்பட்டது புஷ்பா படம் முழுக்க முழுக்க செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்ததால் ஹிந்தியில் இது ஒரு புதுவிதமான கதையாகவே அமைந்தது.
மேலும் படம் சிறப்பாக இருந்ததால் ஹிந்தி சினிமா பக்கம் புஷ்பா படம் சிறப்பாக ஓடி அதாவது 106 கோடி வசூல் வேட்டை நடத்தியது. தெலுங்கு படமொன்று ஹிந்தியில் இப்படி ஒரு வரவேற்பை பெறும் என ஹிந்தி சினிமா நினைத்து இருக்காது ஆனால் அதை செய்து காட்டி அசத்தியது புஷ்பா.
இந்த படம் ஹிந்தி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் உள்ளதால் அதில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு தனது வீடியோக்களையும் அதில் வரும் நடனங்கள் பாடல்களுக்கும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் புஷ்பா திரைப்படத்தை இந்தி பிரபலங்கள் பலரும் பார்த்து மிரண்டு போயுள்ளனர்.
அந்த வகையில் தீபிகா படுகோன் விரைவில் அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை தெரிவித்தார் இவரைப் போலவே அவரும் அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். புஷ்பா திரைப்படத்தின் வெற்றியால் தற்போது பாலிவுட் நடிகைகள் பலரும் அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆசைப்படுகின்றனர்.