44 வயது நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைபடும் 25 வயது இளம் நடிகை.! என்ன ஒரு ஆசை அப்போ அஜித் விஜய்லாம் வேணாமா.! கேள்வி எழுப்பிய ரசிகர்கள்

பிரபலர் ஒருவரின் மகள் நடிகர் விஜய் சேதுபதி உடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து பலவிதமான வேடங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருகிறார்.

மேலும் சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் ஹீரோவாக நடித்ததை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை கிடைத்து வருகிறது. மேலும் அந்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினையும் பெற்று வருவதை பார்த்து வருகிறோம்.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும், தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த சிலர் நாட்களுக்கு முன்பு இந்த தகவலை விஜய் சேதுபதி உடன் போன் மூலம் தெரிவித்ததாகவும் அதற்கு விஜய் சேதுபதி ஆச்சரியம் எனவும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

எனவே இதனை வைத்து பார்க்கும் பொழுது அடுத்ததாக ஜான்வி கபூர் கண்டிப்பாக தமிழில் விரைவில் திரைப்படங்களில் நடிக்க தொடங்குவார் அவ்வாறு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் இவர் கண்டிப்பாக விஜய் சேதுபதி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகுவார் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

JANVI KABOOR
JANVI KABOOR

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படமான குட்லக் ஜர்ரி என்ற படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தின் ஜான்வி கபூர் நடித்திருந்தார். மேலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக திரைப்படங்கள் நடிக்க இருக்கிறார் .அந்த வகையில் இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதையும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment