ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.! நயன்தாராவும் இல்ல.. திரிஷாவும் இல்ல..

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் நாளை அதிகாலை ஒரு மணிக்கு திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர் காரணம் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதுதான் மேலும் இந்த படம் செம சூப்பராக வந்திருப்பதாக படத்தில் நடித்த நடிகர்கள் தொடங்கி இயக்குனர் வரை..

அனைவரும் சொல்லி உள்ளனர் இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 62 ஆவது திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த படம் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது அதற்கு முன்பாக படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் விக்னேஷ் சிவன் அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என சொல்லப்பட்டது அதன் பிறகு திரிஷா நடிப்பார் என சொல்லப்பட்டது ஆனால் இரண்டுமே உண்மை கிடையாது.

ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி தான் என சொல்லப்படுகிறது. இதற்கு சில காரணங்களும் உண்டு.. ஹீமா குரேஷி இதற்கு முன்பாக அஜித்தின் வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உண்மையில் அந்த படத்தில் பல காட்சிகளில் இவர் நடித்திருந்தாராம்.

ஆனால் படம் திரையில் வரும் பொழுது இவருடைய பெரும்பாலான காட்சிகள் நீக்கப்பட்டு இருந்ததாம் அதனால் ரொம்ப அப்செட் ஆகிவிட்டாராம் அவரை சமாதானப்படுத்தும் வகையில் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தில் அவர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகிறதாம் பொறுத்திருந்து பார்ப்போம் அதற்கான அறிவிப்பு வரும் வரை..

 

Leave a Comment