நடிகர் விஜய் பற்றி கூறிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.!

0
vijay sharu khan
vijay sharu khan

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்கள் சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து பேசி உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சாருக் கான் பாலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் இவரை பாலிவுட் கிங் என அழைத்து வருகிறார்கள் இந்நிலையில் தற்பொழுது இவர் தன்னுடைய ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களிடம் பேசி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஷாருக்கான் ரசிகர்களிடம் பேசி உள்ளார் அதில் ரசிகர் ஒருவர் நீங்களும் விஜயும் இருக்கும் போட்டோவை பார்க்கும் பொழுது தெரிகிறது நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு மரியாதை வைத்துள்ளீர்கள் என்று எப்பொழுது இருவரும் சேர்ந்து நடிப்பீர்கள் என்று விஜய்யை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த ஷாருக்கான் அவர்கள் உண்மையிலேயே அவர் ரொம்ப கூல்.. படங்கள் எப்பொழுது நடக்கும் அவர்கள் வேண்டுமென்றால் அவர்கள் செய்வார்கள் என்று கூறினார். இந்நிலையில் தற்பொழுது அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் அவர்கள் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜவான் படத்தில் நடிகர் விஜய் ஷாருக்கானுக்கு கேமியோ அப்பியரன்ஸ் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இது வதந்தி என  கூறப்பட்டு வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இதனை பற்றிய தகவலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிகர் விஜய் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது