பாலிவுட் முன்னணி நடிகரின் படத்தில் விஜயின் மாஸ் ரெபரன்ஸ்.! வைரலாகும் மரணமாஸ் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரது படத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் காப்பியடித்து வருகின்றனர். இந்த வகையில் பாலிவுட் டாப் ஹீரோக்கள் ஒருவரான டைகர் நடித்து அண்மையில் வெளிவந்த படம் பாகி 3 இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சி விஜய் அவர்கள் நடித்த கத்தி திரைப்படத்தின் சண்டை காட்சி சீக்வென்ஸ் போல் அப்படியே இருந்தது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி திரைப்படம் விஜய் அவர்களுக்கு மாபெரும் ஹிட்டடித்த நிலையில் இப்படத்தை இவர்கள் சற்று வேறுபட்டு காட்டியிருந்தாலும் சண்டை காட்சிகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிதளவு ஷேர் செய்து வைரலாகி வருகிறது.

https://twitter.com/TVMP_Pride/status/1236930128397176833

Leave a Comment