விஜயிடம் இதை அப்படியே கற்றுக் கொள்ளவேண்டும்.! பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் பேட்டி.!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவருக்கு தற்போது ஏராளமான ரசிகர் கூட்டங்கள் இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் திரைத்துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இவருக்கு தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள், நடிகர் விஜய்யை பலரும் ரசிப்பதற்கு காரணம் பல கூறலாம் அதில் முதன்மையானது என்னவென்றால் விஜய்யின் நடனம் தான்.

நடனத்தில் நடிகர் விஜய் தனக்கென ஒரு புதிய ஸ்டைலை கடைபிடித்து வருகிறார், அதுவும் தனது இளம் வயதில் இருந்தே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். நடிகர் விஜய்க்கு  நடனம் சொல்லித்தரும் மாஸ்டர்கள் முதல் அவருடன் ஆடும் நடிகைகள் வரை அனைவரும் விஜய் ஒரே டேக்கில் சிரமமான நடனத்தை கூட எளிதில் முடித்து விடுகிறார் என பலரும் பேட்டியில் கூறினார்கள்.

இந்த நிலையில் சென்னையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் அவர்களிடம் நடிகர் விஜயின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரித்திக் ரோஷன் விஜய் அவரின் நடத்துவதற்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

நடனத்தின் போது முழு எனர்ஜியும் பார்த்து வியக்கிறேன். நடனம் ஆடுவதற்கு முன்பு அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என வேடிக்கையாக கூறியுள்ளார்.

Leave a Comment