தனது மனைவிக்கு வெங்காய கம்மலை பரிசாக கொடுத்த 2.0 படம் நடிகர்.! வைரலாகும் புகைப்படம்.! இதுவும் நல்லாத்தான் இருக்கு

0

வெங்காயத்தின் விலை சமீப காலமாக தங்கத்தின் விலை ஏறுவது போல் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது, வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் பாமர மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள், இது அனைவரும் அறிந்தது தான், இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது இதற்கான காரணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை பலருக்கும் தெரிவதே இல்லை.

அதுமட்டுமில்லாமல் தங்கத்தின் விலை அதிகரித்ததை வைத்த சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள், மேலும் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது, இதற்கு பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெங்காயத்தை பரிசாகக் கொடுத்து உள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் அனைத்திற்கும் வெங்காயத்தை பரிசாக கொடுத்து வருகிறார்கள் ஏனென்றால் வெங்காயம் தற்போது அரிய பொருளாக மாறி வருகிறது, அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் வெங்காயத்தை மாலையாக அணிந்திருந்தது பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி அனைவரும் பரபரப்பாக பேசினார்கள். இதுபோல் செய்வதால் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருவதாக கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் அவர்கள் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்போது இந்த நிகழ்ச்சியில் கரீனா கபூரும் கலந்து கொண்டார், அப்பொழுது கரீனா கபூருக்கு வெங்காயத்தில் ஆன காதணியை பரிசாகக் கொடுத்தார்கள், ஆனால் கரீன கபூர் இதை பெரிதாக விரும்பவில்லை. அக்ஷய் குமர் கரீன கபூர் இடமிருந்து வெங்காய காதணியை வாங்கி பின் தன்னுடைய மனைவிக்கு பரிசாக கொடுத்தார்.

இதைப்பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷய்குமார் மனைவி என்னுடைய கணவர் எனக்காக வெங்காய காதணியை பரிசாக கொடுத்துள்ளார் என பதிவிட்டுள்ளார். இந்த பரிசு மிகப்பெரியது தான், கபீர் சர்மா நிகழ்ச்சியில் கரீனா கபூர்க்கு இதை கொடுத்தார்களாம் ஆனால் அவருக்கு இதில் பெரிய ஈடுபாடு இல்லாததால் அதை என் கணவர் வாங்கி வந்தார் எனக்கு இதுமாதிரி பரிசுதான் மிகவும் பிடிக்கும் என நினைத்து என்னுடைய கணவர் எனக்கு வாங்கி வந்துள்ளார் இது மனதை மிகவும் கவர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் இதனால் வெங்காய விலையை கலாய்க்கும்  வகையிலும் வெங்காய விலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் இந்த செயல் இருக்கிறது என சமூக வலைதள வாசிகள் கூறி வருகிறார்கள்.