உணவுமுறை விஷயத்திலும் கிடுக்கிப்பிடி போடும் இந்திய கிரிக்கெட் வாரியம் – ஷாக்கான இந்திய அணி வீரர்கள்.! என்ன சாப்பிட கூடாது.? என்ன சாப்பிடலாம்.? விவரம் இதோ.

இந்திய அணியில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன அதற்கு முக்கிய காரணம் இந்திய அணி 20 ஒரு உலக கோப்பையில் அரையிறுதி சுற்று கூட போகாததால் பிசிசிஐ தற்போது இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

ஆம் 20 ஓவர் கிரிக்கெட்டின் கேப்டனாக இது வரை பயணித்து வந்த விராட் கோலியை தூக்கி விட்டு புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை மாற்றி உள்ளது மேலும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய அணியில் தற்போது 20 ஓவர் பார்மட் புதிய கேப்டனாக ரோகித் இருக்கிறார்.

அண்மையில் கூட நியூசிலாந்துடனான மூன்று 20 ஓவர் போட்டியிலும் வெற்றியை ருசித்து இந்திய அணி அசத்தியது மேலும் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் பார்த்தது இந்திய அணி. இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்ததாக ஒரு புதிய ரூல்ஸை போட்டு உள்ளது.

இது கிரிக்கெட் வீரர்களே எதிர்பார்க்கவில்லை அந்த அளவிற்கு ஒரு புதிய லிஸ்ட் வைத்துள்ளது இனி இந்திய வீரர்கள் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது என்னவென்றால் பன்றி இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சியை சாப்பிட அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரியவந்துள்ளது.

மேலும் ஹலால் இறைச்சி மட்டுமே சாப்பிட அனுமதி கொடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரர்கள் நல்ல ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் உடலை வைத்துக் கொள்ள மிக அவசியம் என்பதை அறிவுறுத்தி உள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

Leave a Comment