சிவாஜி கணேசன் நடித்த படத்தின் தலைப்புகளை மீண்டும் மீண்டும் தனது படத்திற்கு வைக்கும் தனுஷ்.? இப்ப என்ன பெயர் வைத்துயுள்ளார் தெரியுமா.?

dhanush-and-sivaji
dhanush-and-sivaji

தமிழ் சினிமாவில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு பல்வேறு படங்களை கைப்பற்றி வருவதோடு மட்டுமில்லாமல் தனுஷ் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் அவரது மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்.

மேலும் இவரது அண்மைகால திரைப்படங்கள் நல்ல வசூலையும் ஈட்டி உள்ளன அந்த வகையில் அண்மையில் வெளியான ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இவர் திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய படங்கள் அடுத்தடுத்தது நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படங்களும் வெளியாக ரெடியாக இருக்கின்றன.

முதலில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளியாக இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை தற்போது கொண்டாட ரெடியாக இருக்கின்றனர் இது போதாத குறைக்கு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் ஹிந்தியில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார் அந்த திரைப்படமும் திரை அரங்கிற்கு வெளிவர காத்திருக்கிறது.

பாலிவுட்டில் இவர் அக்ஷய்குமார், சாரா அலி கான் ஆகியோருடன் கைகோர்த்து அத் ராங்கி ரே திரைப்படம் உருவாகி முடித்துள்ளது இந்த திரைப்படம் ஒரு வழியாக தமிழிலும் வெளியாக இருக்கிறது அந்த படத்திற்கு தற்போது “கலாட்டா கல்யாணம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தின் பெயர் ஏற்கனவே சிவாஜி நடித்த படத்தின் ஒரு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் சமிப காலமாக  நடிகர் திலகம் சிவாஜி நடித்த படத்தின் பெயரையே வைத்து வருவதால் அந்த படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது அண்மையில் சிவாஜி நடித்த கர்ணன் படத்தின் பெயரை தனது படத்திற்கு வைத்திருந்தார் அந்த படம் மாபெரும் ஹிட்டடித்தது அதைத் தொடர்ந்து தற்போது “கலாட்டா கல்யாணம்” என்ற பெயரை தற்போது தனது படத்திற்கு வைத்துள்ளதால் அந்த படமும் மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக அமையும் என கருதப்படுகிறது.