ரசிகர்களால் தாக்கப்பட்டாரா.. ப்ளூ சட்டை மாறன் – வெளிவந்த புகைப்படம்.!

சமீபகாலமாக படங்களை விமர்சனம் என்ற பெயரில் கிழித்து தொங்க விட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி அஜித் விஜய் என தொடங்கி புதுமுக நடிகர்கள் அனைவரது படங்களையும் விமர்சனம் என்ற பெயரில் நார் நாராக கிழித்து எடுப்பதையே வேலையாக வைத்துள்ளார்.

அப்படியே அண்மையில் வெளிவந்த அஜித்தின் வலிமை திரைப்படத்தையும் வச்சி செய்ததோடு மட்டுமல்லாமல் அஜித்தையும் தேவையில்லாமல் பேசி வம்பு இழுத்தார் இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் அவரை சமூக வலைதளப் பக்கங்களில் கண்ணா பின்னான்னு திட்டி தீர்த்தனர்.

பதிலுக்கு அவரும் சும்மா இல்லாமல் அஜித் நடித்த வலிமை படம் குறித்து அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வந்தார். மேலும் அஜித்திற்கு யாரெல்லாம் சப்போர்ட் செய்தார்களோ அவர்கள் எல்லோரையும் வம்புக்கு இழுத்தார் ப்ளூ சட்டை. இன்னும் இந்த சண்டை ஓய்ந்தபாடில்லை இப்படி இருக்கின்ற நிலையில் ப்ளூ சட்டை மாறன் சென்னையில் இருக்கும் பிவிஆர் திரையரங்கிற்கு வந்து இருந்தார்.

அப்போது அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா.? என்று தெரியவில்லை ஆனால் இரண்டு புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவியது இதற்கு பதிலளிக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தனது புதிய பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியது தியேட்டர்ன்னா நாலு பேரு பார்க்க வந்து போவாங்க முடிஞ்சதும் வெளியே போவாங்க அதை மறைந்து நின்று ஏன்டா போட்டோ..

எடுத்த நேரில் வந்து தொலைய வேண்டியதுதான.? இதை ஷேர் பண்ற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் எடுக்க வேண்டியது நேரவந்து எடுக்க வேண்டியது தானே.. எப்படியோ  பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி என கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Leave a Comment