செவிக்கு விருந்து கொடுத்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா.!

blue star : பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இவர் தற்பொழுது படத்தை தயாரிப்பதில் இறங்கிவிட்டார் அந்த வகையில் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார் இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்ற இந்த திரைப்படத்தின் விமர்சனம் தற்பொழுது வெளியாகி உள்ளது படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கமான எக்ஸ் வலைதளத்தில் விமர்சனங்களை கூறியுள்ளார்

படத்தில் சொல்ல வருவதை தென்னந் தெளிவாக கூறியுள்ளார் திரைக்கதை எந்த விதத்திலும் சொல்ல வந்த விஷயத்திலிருந்து தவறியதே  கிடையாது அதேபோல் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு இருவருடைய நடிப்பு performance அற்புதம்.. முதல் பாதி சூப்பர் எனவும் இரண்டாவது பாதி தோய்வு இருந்ததாகவும் அதில் சில காட்சிகளை கட் பண்ணி தூக்கி எறிந்து இருக்கலாம் எனவும் கூறுகிறார்கள்.

அதேபோல் கீர்த்தி பாண்டியன் வழக்கமாக இருக்கும் ஹீரோயின் போல் இல்லாமல் மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். அதேபோல் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு இருவரும் தங்களுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு கிரிக்கெட் மிக முக்கிய பாலமாக அமைந்துள்ளது கோவிந்த வசந்தாவின் ரயிலின் ஒலிகள் பாடல் சூப்பர் அதேபோல் பின்னணி இசை நன்றாக இருக்கிறது நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஒரு சிறப்பான படைப்பு என பலரும் கூறியுள்ளார்கள்.