நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு சில தினங்களில் வாரிசு படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்ததும் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நேற்று வாரிசு பாடத்தின் டிரைலர் வெளியாகி பல மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இது ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் டைலரில் விஜய் மாஸ் காட்டியுள்ளார் என்று கூறி வருகின்றனர் ஆனால் அஜித் ரசிகர்கள் வாரிசு ட்ரைலரை பார்த்து பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். இதற்கும் விஜய் ரசிகர்கள் பதில் அளித்து வருகிறார்கள் அதாவது இது ஒரு குடும்ப செண்டிமெண்ட் படம் அதனால் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக் கூடிய படம் என்று கூறியிருக்கின்றனர்.
இப்படி விஜய் அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் சண்டையிட்டு வரும் நிலையில் இவர்களுக்குள் கோலு மூட்டி விடுவது போல ப்ளூ சட்டை மாறன் வாரிசு ட்ரைலரை பங்கமாக காலத்து ஒரு மீம்ஸ் போட்டு உள்ளார். இவருடைய இந்த மீம்ஸ் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
அதாவது பிரண்ட்ஸ் படத்தில் கடிகாரம் காமெடியில் நடிகர் வடிவேலு சொல்லும் காமெடியான “அப்பாடா நான்கூட புதுசுன்னு நெனச்சி பயன்துட்டாங்க” என்று அந்த மீம்ஸை போட்டு பங்குமாக வாரிசு பட ட்ரைலரை கலாய்த்து உள்ளார் ப்ளு சட்டை மாறன். இதை பார்த்த விஜய் அஜித் ரசிகர்கள் எங்களுடைய பிரச்சனையை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் நீ ஒன்னும் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று ப்ளு சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
Ajith fans now:
'அப்பாடா.. நான்கூட புதுசுன்னு நெனச்சி பயந்துட்டங்க' pic.twitter.com/8JhbKDt9up
— Blue Sattai Maran (@tamiltalkies) January 4, 2023