பொன்னியின் செல்வன் 2 பாகத்தை வைத்து மணிரத்தினத்தை பங்குமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.! இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்…

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வந்தது. இரண்டு பாகங்களாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செம்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த ட்ரைலரை பார்த்து நெடிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தின் டிரைலரை பார்த்து பிரபல விமர்சகர் ஒருவர் மணிரத்தினத்தை பங்குமாக கலாய்த்துருக்கிறார். இவருடைய அந்த மீம்ஸ் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

அதாவது கருப்புசாமி குத்தகைக்காரர் படத்தில் வடிவேலு அவர்கள் ஒருவரை வழிமறித்து அவரிடம் காசு வாங்குவது போல இருக்கும் காட்சியை புகைப்படம் ஆக எடுத்து அந்த இமேஜில் வடிவேலுக்கு பதிலாக மணிரத்தினம் அவர்களுடைய முகத்தையும் அதன் பிறகு விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோரின் போட்டோவையும் வைத்து மீம்ஸ் ஒன்றை ஷேர் செய்து உள்ளார்.

அதாவது இங்க பாரு மணி இந்த தடவை எல்லாம் தமிழர்களின் அழிக்க முடியாத பெருமை மறைக்கப்பட்ட சோழர்களின் வரலாறு அப்புறம் கடம்பூர் மாளிகை ரகசியம் தெரியுமா உனக்கு? என்று மணிரத்தினத்தை கலாயித்து உள்ளார்.  இவருடைய இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் செம்ம வைரளாகி வருகிறது.

இதோ அந்த ட்விட்டர் பதிவு…

Leave a Comment