அட்லீ இயக்கிய ஜவான் படத்தை பார்த்துவிட்டு உயிரோடு வருவானே தெரியல.! ரிலீசுக்கு முன்பே அலப்பறையை ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்

blue sattai maran
blue sattai maran

Blue sattai Maran: ப்ளூ சட்டை மாறன் ஜவான் படத்தின் ஆரம்பத்தில் இருந்து வசூல் வரை வச்சி செய்த நிலையில் இதனை அடுத்து தற்பொழுது ஜவான் படத்தினை கழுவி ஊற்றியுள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் அனைத்தையும் முதல் ஷோவே பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி எந்த முன்னணி நடிகராக இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் தனது யூடியூப் சேனலில் விமர்சனங்கள் பதிவிட இவரை திட்டி தீர்க்க வேண்டும் என்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தினை மிகவும் கேவலமாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது ஜவான் பட குறித்து இவருடைய பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜவான் படம் வெளியாக இருக்கும் நிலையில் நடிகை நயன்தாராவுடன் ஷாருக்கான் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜவான் படத்தினை பார்த்துவிட்டு உயிரோடு வருவேனா மாட்டேனா என ட்வீட் ஒன்றை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவ்வாறு அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற அனைத்து படங்களையும் ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றினார்.

blue sattai maran 1
blue sattai maran 1

எனவே ஜவான் படம் குறித்த விமர்சனங்களையும் தொடங்கி இருக்கிறார். ஜவான் படத்தில் ஷாருக்கான் நயன்தாராவை தொடர்ந்து விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் நிலையில் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

இவ்வாறு இதனை அடுத்து சனாதானம்னா என்ன? அந்த தர்மத்துல உங்களுக்கு உடன்பாடு இருக்கா? , ஜவான் படத்தோட ரன்னிங் டைம் 2 houres 50 minutes. இதை முழுசா பார்த்துட்டு உயிரோட வீடு வந்து சேர முடியுமான்னு தலையை பிச்சுகிட்டு இருக்கேன், நீ வேற ஏண்டா புரியாத டாபிக்கை பத்தி கேள்வி கேக்குற? என ப்ளூ சட்டை மாறன் பதிவிட இதனால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.