சுனைனா நடித்த நிலா நிலா ஓடி வா என்ற வெப் சீரிஸின் ப்ளூப்பர்ஸ் வீடியோ!! இதோ உங்களுக்காக.

0

Bloopers video of the web series ‘Nila Nila Odi Va’ starring Sunina: நடிகை சுனைனா இவர் ஒரு தென்னிந்திய நடிகை ஆவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் நகுலுக்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் வரும் நாக்கமுக்க என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. இந்த பாடலின் மூலம் இந்த படத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இதனைத்தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்பறவை, சமர், பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம், வன்மம், சில்லுக்கருப்பட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மஞ்சுநாத் இயக்கத்தில் ட்ரிப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போதெல்லாம் பிரபல நடிகர், நடிகைகள் அனைவரும் வெப்சீரிஸ் பக்கம் தலை திருப்பி உள்ளார்கள். அந்த வகையில் சுனைனா அவர்களும் நிலா நிலா ஓடி வா என்ற காதல் ஹாரர் த்ரில்லர் வெப்சீரிஸ்சில் நடித்து புகழ் பெற்றார். இந்த தொடரை இயக்கியவர் திரு திரு துறு துறு என்ற திரைப்படத்தை இயக்கிய நந்தினி ஆவர். மேலும் இதை தொடர்ந்து அவர் தெலுங்கு வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த வெப்சீரிஸில் அவர் நடித்த சில காட்சிகள் ப்ளூப்பர்ஸ் ஆனது. தற்போது அந்த வீடியோவை சுனைனா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் பரவலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.