பிளாக் கலர் உடையில் நரைத்த முடியுடன் போஸ் கொடுத்த தளபதி விஜய்.! வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ஜனவரி 13ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

முதலில் தமிழகத்தில் நூறு சதவீத திரையரங்கிற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது அதன்பின் தற்பொழுது அந்த முடிவிலிருந்து தமிழக அரசு பின் வாங்கியுள்ளது இருந்தாலும் மாஸ்டர் திரைப் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

படம் லாபமோ நஷ்டமோ திரையரங்கில் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்த புரொமோஷன் வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது..  விஜய் திரை பயணத்தில் முதல் முறையாக பல மொழிகளில் வெளியாக இருக்கிறது இந்த மாஸ்டர் திரைப்படம்.

மேலும் படக்குழு தினமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைப்பதற்காக ப்ரமோஷன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் இந்த நிலையில் தளபதி விஜயின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் விஜய் நரைத்த தாடியுடன் கருப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார் விஜய் உடன் இருப்பது காளிதாஸ் ஜெயராம். இவர் சுதா கொங்கரா இயக்கிய பாவ கதைகள் படத்தில் தங்கம் என்ற கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.

காளிதாசன் ஜெயராமன் நடிப்பை பார்த்துவிட்டு தளபதி விஜய் உங்கள் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருக்கிறது அதனை பார்த்து நான் வியந்து போனேன் எனக் கூறி தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை காளிதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

vijay-kalidas

Leave a Comment

Exit mobile version