கருப்பு நிற முடி.. கருப்பு சட்டை.. பக்கா யங் லுக்கில் தல அஜித்.! பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தல அஜித் இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டிருப்பவர், தற்பொழுது தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.

தல அஜித் நடிப்பதை தாண்டி பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கிறார், கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோசூட், துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானத்தை இயக்குவது, என பல விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர், அதேபோல் பிரியாணி சமைப்பதில் ஆர்வம் உடையவர்.

இந்த நிலையில் இவர் தீனா பட ஒளிப்பதிவாளர் உடன் இணைந்து ஏரோனட்டிகல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோவை நடிகர் அஷ்வின் வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

அஜித் இந்த வீடியோவில் மிகவும் யங் லுக்கில் கருப்பு நிற உடையில் கருப்பு முடியுடன் பக்காவாக இருக்கிறார். தற்பொழுது அஜித்தை சமீபகாலமாக பேப்பர் அண்ட் சால்ட் லுக்கில் தான் வலம் வருகிறார் இந்த நிலையில் இந்த புதிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=si7telPClaA

Leave a Comment

Exit mobile version