பல கோடி சம்பளமாக கேட்டதால் பையா திரைப்படத்தை தவறவிட்டு வருந்தும் பிரபல நடிகை.! அய்யயோ வட போச்சே

0

நடிகர் கார்த்திக் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் சுல்தான் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது மேலும் இத்திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார், தமிழில் முதன்முதலாக ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள திரைப்படம் இதுதான்.

மேலும் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, நடிகர் கார்த்திக் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானார், இவர் தன்னுடைய அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தி முதல் திரைப்படத்திலேயே வெற்றி பெற்றார். அதன் பிறகு பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் கார்த்திக்.

அவற்றில் ஒன்றுதான் பையா, இந்த திரைப்படத்தை லிங்குசாமி தான் இயக்கியிருந்தார் 2010 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பையா திரைப்படத்தில் முதன்முதலாக நடிகையாக நடிப்பதற்கு நயன்தாராவை அணுகி உள்ளார்கலாம் ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக நயன்தாரா நடிக்க முடியாமல் போனது அதன்பிறகுதான் அந்த வாய்ப்பும் தமன்னாவிற்கு சென்றது.

இந்த நிலையில் நாங்கள் மூவரும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து மீண்டும் வெற்றி படத்தை கொடுப்போம் என உறுதி அளித்துள்ளார். நயன்தாரா பையா திரைப்படத்தை தவற விட்டுவிட்டோமே என இன்றுவரை வருத்தப்பட்டு வருகிறாராம்.