திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பைசன் திரைப்படத்தின் ott ரிலீஸ் தேதி இதோ..

bison
bison

இந்திய கபடி அணியின் முன்னாள் வீரரான மனத்தை கணேசன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு வெளியாக்கிய திரைப்படம் தான் பைசன் காளமாடன்.

இந்த திரைப்படத்தை மாறி செல்வராஜ் இயக்கியிருந்தார் படத்தில் துருவ் விக்ரம் பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதேபோல் மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தில் மனத்தி கணேசன் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களை படமாக்கியுள்ளார்.

தீபாவளி தின ஸ்பெஷலாக வெளியாகிய இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள் அதேபோல் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்றது வெறும் முப்பது கோடி பட்ஜெட்டில் உருவாகிய அந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு வசூல் செய்தது.

அதேபோல் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் எழுவது கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது இதனை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்தது இந்த நிலையில் நவம்பர் 21ஆம் தேதி இந்த திரைப்படம் நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.