அமெரிக்காவில் இருக்கும் தேசிய பூங்காவில் காட்டெருமை ஒன்று சிறுமியை தாக்கியுள்ளது, இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி மக்களை அச்சுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் காட்டெருமைகள் அதிகம் காணப்படுகின்றன, இந்தப் பூங்காவை காண பல இடத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம், இந்த நிலையில் அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை தாக்க ஆரம்பித்தது.
இதில் சிலர் ஓடி தப்பித்து விட்டார்கள் ஆனால் நின்று கொண்டிருந்த சிறுமியை அந்த காட்டெருமை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளது, பின்பு அந்த சிறுமி காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள், சிறிய காயங்களுடன் அடிபட்ட 9 வயது சிறுமி தற்போது நலமாக இருக்கிறார், இதோ அந்த காட்டெருமை தாக்கிய வீடியோ.
? Things escalated quickly when a bison spotted this 9-year-old girl at Yellowstone National Park. Luckily, she's OK! (Her parents are the ones running away in the background, according to the witness who shot this video.) https://t.co/xfieCv5iHj pic.twitter.com/Pei98hR6Rf
— Nicole Emmett (@Nicole_Emmett) July 24, 2019