தேசிய விருது பெற்ற நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராணா டகுபதி, சாய் பல்லவி, சமந்தா.!! வைரலாகும் புகைப்படம்.

Birthday wishes of Rana Dagupati, Sai Pallavi, Samantha to national award winner actress: 2006ஆம் ஆண்டு தமிழில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியாமணி. மேலும் இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டியதன் மூலம் தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பதை அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவில் தேசிய விருதைப் பெற்ற நடிகைகள் வெகுசிலரே லக்ஷ்மி, சோபா, சுகாசினி, அர்ச்சனா போன்றோர் அதில் இவரும் ஒருவரே.

தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,  ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் விராத பர்வம், மற்றும் நரப்பா என்கின்ற படத்திலும்  நடித்து வருகிறார்.

இந்த விராத பர்வம் திரைப்படத்தில் நடிக்கும் ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி இன்று பிறந்தநாள் காணும் நடிகை பிரியாமணிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் நடிகை சமந்தாவும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை நடிகை ப்ரியாமணி அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

happy_birthday_priyamani_samantha_akkineni_sai_pallavi_rana_daggubati_wish_the_virata_parvam_actress_1

Leave a Comment

Exit mobile version