சினிமாவில் தோல்வி அடைந்ததால் சினிமாவை விட்டே விலகிய முன்னணி நடிகர்களின் உடன் பிறப்புகள்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ்சினிமாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகள் மற்றும் அக்கா, தங்கைகள் என இரண்டு பேருமே வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. உதாரணமாக சூர்யா-கார்த்திக், ஜெயம் ரவி- மோகன்ராஜா, நக்மா- ஜோதிகா போன்ற சில உடன்பிறப்புகள் சினிமா துறைக்கு வந்து இரண்டு பேருமே சாதித்துள்ளனர். இவர்களைப் போலவே பல உடன்பிறப்புகள் சினிமாத்துறைக்கு வந்து அதில் ஒருத்தர் வெற்றியும் மற்றொருவர் தோல்வியையும் சந்தித்து சினிமாவை விட்டுவிலகிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி தோல்வியடைந்ததால் சினிமா துறையிலிருந்து விலகி போன பிரபலங்கள் யார் யாரென தற்போது காண்போம்.

ஆர்யா – பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் ஆர்யா. இவருடைய தம்பிதான் சத்யா இதுவரையிலும் தமிழ் திரையுலகில் எந்த ஒரு வெற்றியை படத்தையும் இவரால் தர முடியவில்லை. இவர் தமிழ் சினிமாவில் அமரகாவியம், புத்தகம், எட்டு திக்கு போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இப்படங்கள் இவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை என தான் கூறவேண்டும்.

ஜீவா – ஜீவாவின் அண்ணன் ஜித்தன் ரமேஷ். ஜித்தன் ரமேஷ் அவர்கள் தமிழில் ஜித்தன், கிளி வரதன், அஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஆனால் இப்படங்கள் அனைத்துமே ஜித்தன் ரமேஷ் அவர்களுக்கு கை கொடுக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி விட்டார்.

கமலஹாசன் – கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் இவர் பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வரைக்கும் இவருடைய தம்பியான கமல்ஹாசன் போல தமிழ் சினிமாவில் இவரால் சாதிக்க முடியவில்லை.

முருகதாஸ் – தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ் உடைய தம்பி திலீபன் இவர் இவருடைய அண்ணன் தயாரிப்பில் வெளியான வத்திக்குச்சி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தமிழ்சினிமாவில் நீடித்து நிற்க முடியவில்லை.

சிம்பு – பிரபல தமிழ் நடிகரான சிம்புவின் தம்பி குரல் அரசன். இவர் அலை ஒருவசந்தகீதம், சொன்னால்தான் காதலா என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் அதன்பிறகு நடிப்பதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் இவர் தற்போது வரைக்கும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

பிரபுதேவா- நடிகர் மற்றும் நடன அமைப்பாளர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர் தான் நடிகர் பிரபுதேவா. இவருடைய உடன்பிறந்த தம்பியான நாகேந்திர பிரசாந்த் அவர்கள் தமிழில் தொட்டாசினிங்கி, குஷி, 123, கில்லி உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் பிரபுதேவா அவர்களைப்போல தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தினை இவரால் தற்போது வரைக்கும் பிடிக்க முடியவில்லை.

விஷால் – நடிகர் விஷால் அவரின் அண்ணன் மற்றும் நடிகரும், தயாரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணா. இவர் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் நம்பியார் கூட பூப்பறிக்க வருகிறோம் மற்றும் லவ் மெரிட் போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் இப்படங்களுக்கு பிறகு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் நடிகர் விக்ரம் கிருஷ்ணா அவர்கள் நடிப்பதை விட்டுவிட்டார்.

ஷாலினி – நடிகை ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ரிஷி இவர் காதல் வேறு, கிரிவலம், சுற்றுலா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் ஆனால் எதுவும் சரியாக ஓடாத காரணத்தினால் தமிழ்சினிமாவில் இவரால் தொடர்ந்து நீடித்து நிற்க முடியவில்லை. மேலும் நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி அவர்களும் திரையுலகில் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் 2016ம் ஆண்டில் வீர சிவாஜி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் சரியாக ஓடாத காரணத்தினால் ஷாமலி அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஏஎல் விஜய் – தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் ஏஎல் விஜய் இவரின் உடன் பிறந்த தம்பி தான் உதயா. உதயா அவர்கள் தமிழில் திருநெல்வேலி, கணபதி வந்தாச்சு, ரா ரா மற்றும் ஆதி குமார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த அனைத்து படங்களுமே இவருக்கு கை கொடுக்காத காரணத்தினால் இவரால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் நீடித்து நிற்க முடியவில்லை.

ஸ்ரீதிவ்யா – நடிகை ஸ்ரீதிவ்யாவின் அக்காவான ஸ்ரீரம்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு வெளியான யமுனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாத காரணத்தினால் அதன் பிறகு ஸ்ரீரம்யா அவர்களுக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

சங்கீதா – சங்கீதாவின் தம்பி  பரிமல் இவர் 2009 ஆம் ஆண்டில் தமிழில் ஓடிப்போலாமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஆனால் இந்த படம் சரியாக போகாத காரணத்தினால் அதன்பிறகு எந்த ஒரு படவாய்ப்புகளும் வராத காரணத்தினால் தமிழ் சினிமாவில் தற்போது வரைக்கும் சாதிக்க முடியவில்லை.

காஜல் அகர்வால் – திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வா. இவரின் தங்கை நிஷா அகர்வால் இவர் 2012ஆம் ஆண்டில் எஷ்தம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஆனால் இந்த படம் சரியாக ஓடாத காரணத்தினால் தமிழில் இருந்து விலகி தெலுங்கில் நடித்துவந்த நிஷா அகர்வால்  தற்பொழுது சினிமாவில் இருந்து முழுமையாக அகன்று விட்டார். தற்போது தன் சொந்த வாழ்க்கையை மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.

தேவயானி – பிரபல நடிகை தேவயானியின் தம்பி நகுல் இவர் தமிழில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காதலில் விழுந்தேன், வல்லினம் மற்றும் காதலுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஆனால் இந்த படங்கள் அனைத்தும் சரியாக ஓடாத காரணத்தினால் இவரால் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தொடர்ந்து நீடித்து நிற்க முடியவில்லை.

இளையராஜா – தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளர்களில் ஒருவர் தான் இசைஞானி இளையராஜா அவர்கள் இவருடைய தம்பி தான் கங்கை அமரன். இவர் எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவருடைய இசையமைப்பில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் நான் வாழ்வில் மாயம் அதன்பிறகு இவர் இசையமைத்த படங்கள் சரியாக ஓடாத காரணத்தினால் இவருடைய அண்ணனான இளையராஜாவைப் போலவே தமிழ் சினிமாவில் சாதிக்க முடியவில்லை.

யுவன் சங்கர் ராஜா  – பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவின் தம்பி கார்த்திக் ராஜா இவர் உள்ளம் கொள்ளை போகுதே, தித்திக்குதே போன்ற படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

வெங்கட் பிரபு – மங்காத்தா, சென்னை 28 போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனரான வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி இவர்  காமெடி மற்றும் ஹீரோ என பல வேடங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் எதுவும் கை கொடுக்காத காரணத்தினால் பிரேம் ஜி அவர்கள் தனது அண்ணனுடைய இயக்கத்தில் வெளிவர கூடிய படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

அதி – மிருகம், வீரம் மற்றும் மரகதநாணயம் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர் தான் நடிகர் ஆதி. இவருடைய அண்ணனான சத்திய பிரபா ஒரு இயக்குனர் இவர் தம்பியான நடிகர் ஆதியை வைத்து யாகவராயினும் நா காக்க படத்தை இயக்கியுள்ளார் ஆனால் படம் சரியாக ஓடாத காரணத்தினால் இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

Leave a Comment