பல அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக்கிலிருந்து தமிழை தூக்கி விட்டு ஹிந்தி சேர்ப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி.!

0
Tamil-language-removing-in-school-Biometric
Tamil-language-removing-in-school-Biometric

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் ஆசிரியர் வருகை பதிவேடாக பயோமெட்ரிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதில் ஆசிரியர் வந்தவுடன் தலைமை ஆசிரியர் அறையில் இருக்கும் ஒரு சிறிய இயந்திரத்தில் கைரேகை வைக்க வேண்டும், அவ்வாறு கைரேகை வைத்தால் எப்போது பள்ளிக்கு வந்துள்ளார்கள் என்ற நேரத்தை அந்த எந்திரம் காண்பித்துவிடும்.

பின்னர் அவர்களின் ஆதார் அடையாள எண்ணை பதிவு செய்ய வேண்டும் அதேபோல் பள்ளி நேரம் முடிந்ததும் இதேபோல் பயோமெட்ரிக் கைரேகை வைத்து விட்டு தான் செல்ல வேண்டும், அப்பொழுதுதான் ஆசிரியர் எப்பொழுது வெளியே செல்கிறார் என்ற நேரத்தை கணக்கிட முடியும்.

இதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் பயோமெட்ரிக் பொருத்தப்பட்டுள்ளது, இந்த பயோ மெடிக்கல் முன்பு தமிழ் மற்றும் இங்கிலீஷில் தான் திரையிடப்படும், ஆனால் தற்பொழுது தமிழை தூக்கி விட்டு ஹிந்தி சேர்த்துள்ளார்கள், இப்பொழுது ஹிந்தி மற்றும்  இங்கிலீஷ் மட்டும்தான் திரையில் காண்பிக்கப்படுகின்றது, இதனை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

மேலும் மீண்டும் தமிழில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.