பல வருடங்களுக்கு முன்பே சீரியலில் நடித்துள்ள பிந்து மாதவி.? அதுவும் எந்த சீரியலில் தெரியுமா.?

0
bindu-madhavi
bindu-madhavi

தமிழில் நன்றாக ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து வந்த பல நடிகைகளும் தற்போது சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை அந்த வகையில் பார்த்தால் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்து உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியவர் தான் பிந்து மாதவி.

இவர் தமிழில் விமலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் தெலுங்கில் நடித்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றாக தமிழ் சினிமாவில் வலம் வந்த பிந்து மாதவி திடீரென ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தவித்து வந்தார் அதுமட்டுமல்லாமல் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் மூலம் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கியது மட்டுமல்லாமல் பிக்பாஸ் பிறகு இவருக்கு ஒரு சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது பொதுவாகவே பல நடிகைகளும் சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் வெள்ளித்திரையில் இருக்கும் பல நடிகைகளைப் போல இவரும் பல வகையான போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் சமீபகாலமாகவே வெளியிட்டு வருகிறார்.

bindu madhavi2
bindu madhavi2

இந்நிலையில் இவரை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் பிந்து மாதவி சன் டிவி தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலில் நடித்துள்ளாராம் ஆம் இவர் சன் டிவி தொலைக்காட்சியில் மகள் என்ற சீரியலில் நடித்து உள்ளார் என இந்த தகவல் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்நிலையில் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் பிந்து மாதவி நடித்துள்ள சீரியலை பற்றி தோண்ட ஆரம்பித்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.