பொதுவாக சினிமாவில் இயக்குனர் ஒரு நடிகரை மனதில் வைத்து அந்த நடிகருக்கு ஏற்றார்போல் கதை எழுதுவது வழக்கம். ஆனால் அந்த இயக்குனர் நினைத்த நடிகருக்கு பதில் வேறு ஒரு நடிகர் ஒப்பந்தமாவது வழக்கம். அந்த வகையில் இயக்குனர் நினைத்த நடிகர் நடிக்க முடியாமல் போனதற்கு பிறகு வேறு ஒரு நடிகர் நடித்து அததிரைபடம் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற திரைப்படங்களும் இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க ஒரு சில திரைப்படங்கள் ரிலீசாவதற்கு பல பிரச்சனைகள் ஏற்படும் இவ்வாறு ஒவ்வொரு திரைப்படம் ரிலீஸ் செய்வதற்குள் அத்திரைப்படத்தின் இயக்குனர் ,தயாரிப்பாளர்கள் ஒரு வழியாகி விடவேண்டும்.
அந்த வகையில் தற்பொழுது பில்லா திரைப்படத்தில் ஒரு கேரக்டரை மனதில் வைத்து இயக்குனர் எழுதி உள்ளார் ஆனால் அந்த பிரபல நடிகரால் இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போக வேறு ஒரு நடிகர் கமிட்டாகியுள்ளார் அந்த வகையில் தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பில்லா திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் முதலில் சந்தானம் நடித்திருந்த சின்ன கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுவை தான் நடிக்க வைக்க முடிவு செய்து உள்ளார். ஆனால் சில காரணங்களால் வடிவேலு நடிக்க முடியாமல் போய்விட்டது.
அதன் பிறகுதான் சந்தானம் நடித்திருந்தார் சந்தானமும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் வடிவேலுவின் ரசிகர்கள் வடிவேலு நடித்திருந்தால் இன்னும் அந்த காட்சி நன்றாக அமைந்திருக்கும் என்று கூறி வருகிறார்கள்.