அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் பட இயக்குனர் முக்கிய அறிவிப்பு.!

billa-director
billa-director

இயக்குனர் விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு குறும்பு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்து ‘அறிந்தும் அறியாமலும்’ என்ற திரைப்படத்தை இயக்கினார், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ‘பட்டியல்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார் பின்பு தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரம், முன்னணி நடிகரான அஜித்தை வைத்து ரஜினி நடிப்பில் வெளியாகிய பில்லா திரைப்படத்தை தற்பொழுது உள்ள காலகட்டத்திற்கு ஏற்றவாறு ரீமேக் செய்தார்.

இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது, அதேபோல் அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம், இதனைத் தொடர்ந்து மீண்டும் சர்வம் திரைப்படத்தை இயக்கி விட்டு அதன் பிறகு அஜித்துடன் ஆரம்பம் திரைப்படத்திலும் இணைந்தார்.

இப்படி பல வெற்றி திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் விஷ்ணு வரதன், இந்த நிலையில் அஜித்துடன் மீண்டும் எப்பொழுது இணைவார் என்று அஜித் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள், இவர்கள் இணைந்தால் படம் மரணமாக இருக்கும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் விஷ்ணுவர்தன் ஹிந்தியில் ஷேர்ஷா  என்ற திரைப்படத்தை இயக்கிய கொண்டிருக்கிறார், இந்த நிலையில் அவர் எச்சரிக்கை நான் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் இல்லை இந்த இரண்டு பக்கங்களும் போலியானது யாரோ ஒருவரின் பெயரில் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவே இந்த பக்கங்களை பின் தொடராதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.