பிகில் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா.! பாக்ஸ் ஆபீசை அதிரவைத்த வசூல் விவரம் இதோ.!

0

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் பிகில், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது, கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த நிலையில் பிகில் திரைப்படம் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது, இந்த திரைப்படம் முதல் நாளே 21 கோடி வரை வசூல் செய்தது, இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் முடிவில், 60 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கணித்துள்ளார்கள்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன இதில் தமிழகத்தில் மட்டும் 60 கோடி, கேரளா ஆந்திரா தெலுங்கானாவில் 30 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் பிகில் திரைப்படம் 40 கோடி வசூலை தாண்டி உள்ளது மொத்தம் 3 நாட்களில் 130 கோடி வசூலை கடந்து விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் தெரிவித்துள்ளார்கள்.