பிகில் மற்றும் கைதி இரண்டாம் நாள் வசூலில் யார் அதிகம் இதோ விவரம்.!

0

இந்த தீபாவளிக்கு அட்லி இயக்கத்தில் பிகில் திரைபடமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி திரைப்படமும் வெளியாகியது, பிகில் திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் காத்துக் கொண்டிருந்தார்கள் அதேபோல் கைதி திரைப்படத்திற்கும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் 25 ஆம் தேதி ரிலீசான 2 திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பில் இருக்கிறது, கைதி திரைப்படத்தை விட பிகில் திரைப் படத்திற்கு தியேட்டர்கள் அதிகம் என்பதால் முதல் நாள் வசூலில் பிகில் அதிக வசூல் ஈட்டியது.. இந்த நிலையில் பிகில் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 27 கோடி வசூல் செய்திருந்தது.

கைதி திரைப்படம் 3 கோடி தான் வசூல் செய்திருந்தது, இந்த நிலையில் இரண்டாம் நாளில் கைதி திரைப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது பிகில் சரிவை சந்தித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிகில் திரைப்படம் தமிழ் நாட்டில் இரண்டாம் நாள் வசூலில் 16 கோடிவசூல் செய்துள்ளது அதேபோல் கைதி திரைப்படம் 3.5 கோடி வசூல் செய்துள்ளது கைதியின் வசூல் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது.