பத்து நாட்கள் முடிவில் பிகில் VS கைதி வசூலில் எது கில்லி.? இதோ வசூல் நிலவரம்

0
kaithi bigil
kaithi bigil

பண்டிகை நாட்கள் என்றாலே பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாவது வழக்கம் தான் அதைத்தான் மக்களும் விரும்புவார்கள், அந்த வகையில் இந்த தீபாவளி விருந்தாக விஜயின் பிகில் திரைப்படமும், கார்த்தியின் கைதி திரைப்படமும் ரிலீஸ் ஆகியது. பிகில் திரைப்படத்தை அட்லியும் கைதி திரைப்படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ம் இயக்கி உள்ளார்கள்.

தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
பிகில் திரைப்படமும் கைதி திரைப்படமும் வெளியாகி 10 நாட்கள் கடந்துவிட்டன, இரண்டு திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேபோல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பத்து நாட்கள் முடிவில் சென்னையில் வசூல் நிலவரம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது சென்னையில் பிகில் திரைப்படம் 10.07 கோடியும் கைதி திரைப்படம் 2.79 கோடியும் வசூல் செய்துள்ளது.