பிகில் படத்தின் ட்ரைலர் ரன்னிங் டைம் குறித்த தகவல்.!

0
Thalapathy-64
Thalapathy-64

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது, மேலும் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அப்பா மகன் என்ற கதாபாத்திரத்தில் தான்.

மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இவருடன் இணைந்து யோகி பாபு ஆனந்தராஜ் டேனியல் பாலாஜி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.

ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார், இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய பிகில் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரல் ஆனது, இந்த நிலையில் பிகில் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது, இன்று மாலை ஆறு மணிக்கு ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில் #BigilTrailerDay என்ற ஹேஷ் டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் ட்ரைலர் ரன்னிங் டைம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது அதன்படி இரண்டு நிமிடம் 30 வினாடிகள் நீளம் கொண்டதாக ட்ரைலர் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.