பிகில் ட்ரைலர் வெளியான 10 நிமிடத்தில் யூடியூபில் செய்த பிரமாண்ட சாதனை.!

0
bigil trailar
bigil trailar

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது, மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக கோலாகலமாக நடைபெற்றது.

அந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பொதுவான கருத்துக்களை பேசினார் ஆனால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பிகில் திரைப்படத்தின் இசை ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த நிலையில் இன்று மாலை ட்ரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது படக்குழு.

பிகில் டிரைலருக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் ட்ரைலர் வெளியாகி சாதனை பெற்று வருகிறது ட்ரைலர் வெளியாகி 10 நிமிடத்தில் 494,972 பார்வையாளர்களை கடந்து அதில் 379K லைக்ஸ் பெற்றுள்ளது 29k டிஸ் லைக் பெற்றுள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் மாபெரும் சாதனை படைக்கும் என தெரிகிறது.