பிகில் படத்தின் டீசர் மிரட்டலாக இருக்கும்.! அடித்துக் கூறும் பிரபலம்.! ரசிகர்களே இதை கேட்டீர்களா.

0
BIGIL-poster
BIGIL-poster

தளபதி விஜய் தனது 63வது திரைப்படமான பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது, இந்த விழாவில் விஜய் பேசிய வசனம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. படத்தை வருகிற தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட இருக்கிறார்கள், படத்தின் ரிலீஸ் வேலையை அர்ச்சனா கவனிக்கட்டும் என விஜய் கூறியிருந்தார், அதனால் தயாரிப்பு பணிகளை முழுவதும் கவனித்து வருகிறார் அர்ச்சனா கல்பாத்தி.

அர்ச்சனா கல்பாத்தி ஆடியோ வெளியீட்டு விழா முடிந்த கையோடு பல பேட்டிகள் கொடுத்து வருகிறார் அதில் டீசர் பற்றியும் பேசியுள்ளார், அப்பொழுது அவர் கூறியதாவது டீசர் பார்க்கும் போது எல்லோரும் மிரண்டு விடுவார்கள் அதற்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன் என கூறினார்.

என்னைக்கு டீசர் வருகிறதோ அன்றைக்கு அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும், ட்ரெண்ட் ஆகும் சில வருடங்களாக வந்ததில் பிகில் டீசர் தான் ஸ்பெஷல் மற்றும் பெஸ்ட் வீடியோவாக இருக்கும் என கூறியுள்ளார்.