தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார், அட்லி திரைப்படம் என்றாலே பிரம்மாண்டமாக இருக்கும், அதே போல் அவரின் ஸ்டைல் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
விஜய் நடிக்கும் இந்த திரைப்படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது, படத்தில் விஜய் இரண்டு ரோலில் நடித்துள்ளார் என அனைவருக்கும் தெரியும், படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
அதேபோல் சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் என்பதை உறுதி செய்தார், மேலும் செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் அப்டேட் வந்து கொண்டே இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய்யின் பிகில் டீசர் சென்சார் முடிந்து விட்டதாகவும் டீசர் படு மாஸாக இருப்பதாகவும் பிரபலம் ஒருவர் ட்விட் செய்துள்ளார்.
இதோ அதன் பதிவு
BREAKING NEWS : #Bigil Teaser Passed Censor Test & Reports are FANTASTIC ! It will be Out very soon. Superstar #Vijay is Back with Bang. #BigilDiwali ⚡? pic.twitter.com/NKLfxR7GqH
— Umair Sandhu (@UmairFilms) August 29, 2019