விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்டது, இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரலானது அதுமட்டுமல்லாமல் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மகன் விஜயின் பெயர் மைக்கேல் எனவும் அப்பா விஜய்யின் பெயர் ராயப்பன் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது மேலும் படத்தில் ஷாருக்கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது ஆனால் அது உண்மை இல்லை வதந்தி என படக்குழு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் நேற்று ஷாருக்கான் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது போல் தகவல் பரவியது இதைப் பார்த்த படக்குழு பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தது, அதில் இதுபோல் வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை, இது அனைத்தும் தவறான செய்தி என விளக்கம் அளித்துள்ளது.