பிகில் புதிய போஸ்டருடன் ரிலீஸ் பற்றிய தகவலை வெளியிட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.!

0

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் பிகில்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன, பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது ‘பிகில்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 27ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, “ரிலீஸ் தேதி குறித்த வதந்திகளை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம்.

’பிகில்’ படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்தவுடன் அந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.