பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

0
bigilupdate
bigilupdate

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது, இந்நிலையில் பிகில் படத்தின் சென்சார் விவரங்களை  சமீபத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு, படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

இந்த நிலையில் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் வருகின்ற 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.