அட்லியின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில், இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள திரைப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார், அக்டோபர் 12ஆம் தேதி தான் டீசர் வரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது அதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் பிகில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இந்த நிலையில் பிகில் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன, அதற்காக தளபதி 64 டீம் பங்கேற்கும் வகையில் ஃபுட்பால் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு அக்டோபர் 19ஆம் தேதி மற்றும் 20ம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்த போட்டி வேளச்சேரியில் உள்ள டிக்கி டாக்கா இடத்தில் நடைபெற இருக்கிறது, போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவரும் இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் அதுமட்டுமில்லாமல் நுழைவு கட்டணமாக ஒரு டீம்மிற்கு 1250 ரூபாய் கட்டணமாக கட்ட வேண்டும். இந்தப் போட்டி 7 நபர்கள் உள்ள போட்டியா எவ்வளவு நேரம் என்பது இன்னும் தெரியவில்லை.
