பிகில், பேட்ட, விஸ்வாசம் பொங்கல் விடுமுறையை குறிவைத்து தாக்கும் பிரபல டிவி நிறுவனம்.! கலக்கத்தில் மற்ற தொலைக்காட்சிகள்

பொங்கலுக்கு ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் குறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பண்டிகை நாள் வந்தாலே பொதுமக்களுக்கு கொண்டாட்டம்தான், ஏனென்றால் விடுமுறை நாள் என்பதால் பலரும் தங்களது விடுமுறை எப்படி கழிக்கலாம் என பல்வேறு யோசனைகள் செய்து வைத்திருப்பார்கள். ஒருசில மக்கள் விடுமுறை நாள் வந்தாலே திரையரங்கிற்கு சென்று புதிய திரைப்படங்கள் பார்ப்பது என பல்வேறு திட்டங்களை போடுவார்கள்.

அதேபோல் விடுமுறை நாட்கள் என்றதும் தொலைக்காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் கடும் போட்டி நிலவி வரும், அதனால் விடுமுறை நாட்களை முன்னிட்டு புதிய திரைப்படங்களை பல்வேறு தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவார்கள். 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதால் பல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

விடுமுறை நாளான ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை வருகிறது, 5 நாட்கள் விடுமுறை என்பதால் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் நிறுவனம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பிகில் திரைப்படத்தை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

பிகில் திரைப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது அனைவருக்கும் தெரிந்ததே அதனால் புதிய திரைப்படத்தை வெளியிட்டு தங்களது டிஆர்பிஐ அதிகப்படுத்த சன் தொலைக்காட்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதேபோல் ஜனவரி 16ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை ஒளிபரப்புகிறார்கள், 17ம் தேதி விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படமும் ஜனவரி 18ம்தேதி அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் ஜனவரி 19-ம் தேதி ரஜினி நடித்த பேட்டை திரைப்படத்தையும் ஒளிபரப்புகிறார்கள்.

இப்படி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் 5 புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி தங்களது டிஆர்பியை உயர்த்த திட்டமிட்டுள்ளார்கள், இந்த ஐந்து புதிய திரைப்படங்களும் அந்தந்த தேதிகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

Leave a Comment

Exit mobile version