விஜய்யின் பிகில் இசைவெளியீட்டுவிழா எங்கு எப்போது தெரியுமா.? இதோ மாஸ் அப்டேட்

0

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் பிகில் இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது, படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

bigil
bigil

சமீபத்தில் வெளியான பிகில் படத்திலிருந்து விஜய் பாடிய வெறித்தனம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது யூட்யூபில் சில சாதனைகளையும் படைத்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிகில்  இசை வெளியீட்டு விழா எங்கே எப்போது என்ற தகவல் கசிந்துள்ளது, சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் செப்டம்பர் 19ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக அங்குள்ள மாணவர்கள் கூறியுள்ளார்கள். இதற்காக கல்லூரியில் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.