பிகில் நல்ல வசூல் என்று யார் சொன்னது.? பிரபல தயாரிப்பாளர் அதிரடி பேட்டி.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் பிகில், இந்த திரைப்படத்தை அட்லி தான் இயக்கியிருந்தார், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன, இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே ராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது கொள்ளிவுட் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவர் கூறியதாவது, பிகில் நல்ல வசூல் என்று யார் கூறியது.? பத்திரிக்கையாளர்கள் 200 கோடி 300 கோடி வசூல் என்று சொன்னால் உண்மையாகிவிடுமா என கேள்வி எழுப்பியுள்ளார், தயாரிப்பாளர் அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அந்த வலி அவருக்குத்தான் தெரியும்.

விஜய் நடித்தால்தான் நான்கு நாட்கள் நல்லா ஓடியது, ஐந்தாவது நாளில் படம் படுத்துடுச்சு பிகில் ஓடிய திரையரங்கில் தற்போது கைதி தான்  ஓடிக்கொண்டிருக்கிறது எனக் கூறினார். மேலும் கைதி திரைப்படம் எந்த ஒரு ஜிகினா வேலையும் இல்லாத திரைப்படம், போட்ட பணத்தை விட இரண்டு மடங்கு லாபம் பெற்றுள்ளது எனக் கூறினார்.