பிகில் திரைப்படம் லாபமா.? நஷ்டமா.? முதல் முறையாக அறிவித்த தயாரிப்பாளர்.!

0

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது.

இன்று வரை உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் அவர்கள் 180 கோடி பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாரித்திருந்தார், இந்த திரைப்படத்தின் வியாபாரம் மட்டும் படுஜோராக நடைபெற்றது.

இருந்தாலும் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது, இதன் காரணம் தமிழக உரிமை மட்டும் சுமார் 85 கோடிக்கு விற்கப்பட்டது, இந்த நிலையில் தற்பொழுது திகில் திரைப்படம் அனைவருக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது, ஆனால் பலரும் இதை வதந்தி என முட்டுக்கட்டை போட்டார்கள்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரபல தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பிகில்  திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது பிகில் திரைப்படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறினார். இதனால் விஜய் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.