இன்று உலகம் முழுவதும் பிகில் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது, கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் விஜய்யின் பிகில் சத்தம் தான், பிகில் படத்தை பற்றி வரும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
இன்று பிரமாண்டமாக வெளியாகிய பிகில் திரைப்படத்தின் அதிகாலை காட்சியை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ஆக இருக்கிறார்கள், இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியான ரவுண்டானா அருகே அதிகாலை ஒரு மணி காட்சிக்கு ரசிகர்கள் குவிந்தார்கள்.
ஆனால் அதிகாலை 3 மணி வரை படம் திரையிடப்படததால் ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள், இதனையடுத்து ரசிகர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள தடுப்பு கம்பிகள் மற்றும் பேனர்கள், போர்டுகள், கடை விளம்பர பேனர்கள் என அனைத்தையும் சாலையில் போட்டு உடைத்தார்கள், இப்படி அட்டகாசம் செய்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளார்கள்.
விஜய் ரசிகர்களோ போலீஸ் வாகனம் அருகே பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர் இதனால் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே போர்க்களம் போல் காட்சி அளித்தது, இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Fans of superstar Vijay go on a rampage in Krishnagiri as special show of #Bigil was delayed in one of the theaters. Public property was vandalised and stones were pelted. Case registered by police. pic.twitter.com/WxDRmNXnfj
— Shilpa Nair (@NairShilpa1308) October 25, 2019