வசூலில் டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்த பிகில்.! அதிரடியாக பிரபல திரையரங்கம் வெளியிட்ட பாக்ஸ் ஆபீஸ் விவரம் இதோ.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் வசூல் மன்னனாக இருப்பவர் விஜய் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறது இவரின் திரைப்படம் திரைக்கு வந்தால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்த அளவிற்கு அமர்க்களப் படுத்துவார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார் AGS நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பிகில் திரைப்படம் தியேட்டருக்கு வந்த நாளிலிருந்து கூட்டம் அலை மோதுகிறது, தொடர் விடுமுறை என்பதால் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து நல்ல வசூலை எடுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கமான வெற்றி திரையரங்கத்தில் நான்கு நாட்களில் பிகில் இந்த வருடத்தின் டாப் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது என அறிவித்துள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் பிகில் திரைப்படம் 20,000 டிக்கெட்டுகளை விற்று சாதனை செய்து இருப்பதாக அந்த தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.