இணையதளத்தில் லீக்கான பிகில் டீசர்.! அதிர்ச்சியில் படக்குழு

0
bigil
bigil

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் 3வது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்தே விஜய் அடுத்ததாக மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி 64 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின்  அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது அதுமட்டுமில்லாமல் தளபதி64 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

மேலும் பிகில் படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது, இந்த நிலையில் இணையதளத்தில் டீஸர் லீக் ஆகியுள்ளது, இது  உண்மையில் பிகில் படத்தின் டீஸரா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருக்கிறது ஆனால் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி ஆகிவருகிறது.